கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார சேவை மையத்தில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு தீன்தயாள் உபாத்தியாய கிராமின் கொளசல்ய யோஜனா திட்டத்தின் ரிவார்டு சொசைட்டி மூலம் உதவி கணக்காளர் கணணி பயிற்சிக்கு பயிற்சியாளர்களுக்கான நேர்க்காணல் கூட்டம் மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி தலைமையில் நடைப்பெற்றது.இதில் திட்டத்தின் சிறப்பு பற்றி செயல் அலுவலர் திறன்(ம) வேலை வாய்ப்பு முத்துகுமார், ரிவார்டு பணியாளர் ராம்குமார் ஆகியோர் பயிற்சியை பற்றி கூறினார்கள். திட்ட செயலர்கள் குணாளன் ராஜபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்கள் திட்ட செயலர் செந்தாமரைகண்ணன் நன்றியுரை கூறினார். இந்த நேர்க்காணல் முகாமிற்கு அண்ணா கிராமம், பண்ருட்டி வட்டாரத்தில் இருந்து 75 க்கு மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment