தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மற்றும் பாமக தலைவருமான ஜிகே .மணி காலை முதலே வீதி வீதியாக சென்று குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி போன்ற வசதிகள் அனைத்து பகுதிகளிலும் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாய நிலை உள்ளதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பாக இருக்கவும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுமாறும் கேட்டு கொண்டார். பிறகு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தொற்று காரணமாக மாஸ்க் அணியாத பொதுமக்களுக்கு மாஸ்க் கொடுத்து அறிவுரை வழங்கினார் .பஸ்சில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று பஸ்சில் ஏறி பயணிகளிடம் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மாஸ் அணியாதவர்களுக்கு மாஸ்க் கொடுத்தார். பொதுமக்களிடம் சுத்தமான குடி தண்ணீர் தினமும் வருகிறதா, குப்பைகள் நாள்தோறும் சுத்தம் செய்யபடுகின்றனவா, என்று அப்பகுதி மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குடிதண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளில் உடனடியாக தண்ணீர் வசதி செய்து தரப்படும் பேரூராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நம்ம ஊரு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வீதி வீதியாக சென்று அறிவுரை வழங்கினார். பென்னாகரத்தில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றதற்கு பிறகு வீதி வீதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் எம்எல்ஏவை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மாநில துணைப் பொதுச் செயலாளர் சாந்தமூர்த்தி மாவட்ட செயலாளர் பெரியசாமி ஒன்றிய குழு தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தொகுதி அமைப்புச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் பாமக கட்சியினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment