இராசிபுரத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 100 நாள் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் மாவட்ட பொறுப்பாளர் கே. ஆர். என். ராஜேஷ் குமார், துவக்கி வைத்தார்.
*இராசிபுரம் 15..*
*கழக தலைவர் மாண்புமிகு தமிழகத்தின் 23 வது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 100 நாள் சாதனைகளை* விளக்கி நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் நகரில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் *திரு கே ஆர் என் இராஜேஸ் குமார்* அவர்கள் துவக்கி வைத்தார்.
இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் இனிப்பு வழங்கியும் துண்டு பிரசுரம் அளித்தும், கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் அளித்தது, அனைத்து மகளிரும் சாதாரண அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கையெழுத்திட்டது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு தனிதுறை அமைத்து மனு பெறுவது, கொரோனா கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது என பல்வேறு திட்டங்களை தலைவர் அவர்களின் 100 நாள் சாதனைகளாக விளக்கி மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கே.ஆர்.என். இராஜேஸ்குமார், அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்தார்.
ராசிபுரம் நகர
செயலாளர் திரு. என்.ஆர்.சங்கர்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பட்டணம் பேரூர் செயலாளர் பொன் நல்லதம்பி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், நகர அவைத் தலைவர் அமிர்தலிங்கம்,நகரத் துணைச் செயலாளர்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன்,நகர பொருளாளர் நாகேஸ்வரன்,மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் மாயவன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி,மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ் பாபு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் கந்தசாமி,முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராம்குமார்,நகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சரவணன்,நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், கணேசன்,பூபதி,பக்கு, யோகராஜன், கார்த்திகேயன், தமிழ், ராகவன் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள்,சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். மாவட்ட செய்தியாளர் ராஜமாணிக்கம்
Comments
Post a Comment