சிவகாசி கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவானவர்கள் தென்காசியில் கைது-
தனிப்படை போலீசார் அதிரடி
சிவகாசி ஆகஸ்ட் 10
சிவகாசியில் கடந்த புதன்கிழமை முன்விரோதம் காரணமாக, வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சிவகாசியில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கணேஷ், மகேந்திர குமார், சிவகிரி மூன்று நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் 3 பேரும் தென்காசியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்து, சிவகாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து எட்டு பேர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments
Post a Comment