கடந்த பத்து ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இயங்கும் வதிஸ்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.


ஜூலை:05,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வதிஸ்டபுரம்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியரும், இரண்டு இடைநிலை ஆசிரியர்களும் பணிபுரிகிறார்கள். இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பராமரிப்பு பணியும்  செய்யப்படவில்லை என்றும், பள்ளிக் கட்டிடத்தின் சுவர்களுக்கு வண்ணம் கூட பூசவில்லை என்றும், பள்ளியின் பராமரிப்பிற்காக வருடா வருடம் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி எங்கே செல்கிறது என்று தெரியவில்லை என்றும், மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அடிப்படைக் கல்வி கூட சரியான முறையில் கற்பிக்கப் படவில்லை என்றும், தினக்கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை திட்டக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேடிச்சென்று சேர்க்கின்றனர். நடுத்தர குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளை தனியார் பள்ளிகளை தேடிச் சென்று சேர்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறமையின்மையே மேலும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலட்சியமாக இருப்பதாகவும், தாங்கள் நினைத்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவதாகவும், இதே நிலை நீடித்தால் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என்றும், பெற்றோர்கள் மனதில் கவலை எழுந்துள்ளது. எனவே இப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், மாணவர்களின்  மனநிலையை புரிந்து கற்பிக்கும் திறமையான ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Comments