பெ. இராமதாஸ் தருமபுரி மாவட்டம். 30.6.21.
மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்க்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் மழை வெயில் பாராது கொரானா காலத்தில் பணியாற்றிவரும் மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அதேபோல கொரானா நோய் தொற்றால் உயிரிழந்த மின்வாரிய பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. மேலும் மின்வாரியத்தில் காலியாக உளள பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின்போது உதவி செயற்பொறியாளர் இந்திராணி, உதவி பொறியாளர்கள் பசுபதி, ஸ்ரீதர், கவிதா, பாமக மாவட்ட செயலாளர், பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment