தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவ மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குதல்


                    
விருதுநகர்ஜீன் - 30 மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று முறைசார் பள்ளியில் 10/12ம் வகுப்பு முடித்து தற்போது உயர்கல்வி பயிலும் மாணவஃமாணவியர்களுக்கு தமிழக அரசின்  2020-21 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை  தலா ரூபாய் 6000ஃ- வீதம் 43 மாணவர்களுக்கு ரூபாய் 2,58,000/-யை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் கடந்த 1987 முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 9வயது முதல் 14 வயதுக்குட்பட்ட  பள்ளி செல்லாக்குழந்தைகள், தீப்பெட்டி, பட்டாசு தொழில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில்  பணியமர்த்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு திட்டச் சிறப்புப்பயிற்சி மையங்களில்  சேர்த்து 5ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு, பின்னர்  முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட அவர்களை  தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது. அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர்ந்து, உயர்கல்வியான தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், நர்சிங், கேட்டரிங், ஐ.டி.ஐ, இளங்கலை பட்டம், பொறியியல் படிப்பு, சட்ட படிப்பு மற்றும் மருத்துவம்; பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு காலம் முடியும் வரையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூபாய் 500ஃ- உதவித்தொகையாக வழங்கி வருகிறது. 
 அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வழங்கிய  2020-21 ஆம் நிதியாண்டிற்கான உதவித்தொகை தலா ரூபாய் 6000/- வீதம் 43 மாணவஃமாணவியர்களுக்கு வரைவு காசோலையாக ரூபாய் 2,58,000/-  வழங்கப்பட்டுள்ளது. 
 குழந்தை தொழிலாளர்களாக  இருந்து மீண்டு வந்துள்ளீர்கள். உங்களுக்கு நீங்களே வழிகாட்டி. வாழ்க்கையில் தொடக்கமோ குடும்ப பின்னணியோ முக்கியம் அல்ல. தங்களுக்கான குறிக்கோள்கள், கனவு இலக்கு ஆகியவற்றை வகுத்து கொண்டு அதை  நோக்கி தன்னம்பிக்கையுடனும், அர்பணிப்பு உணர்வுடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் கடுமையாக உழைத்தால் தங்களது இலக்கை எளிதாக அடைந்து வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்
மேலும் மனதில் உள்ள அச்சத்தை முதலில் நீக்கி தைரியத்துடன் செயல்படுங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி உயர்ந்த நிலையை எட்டினால் உங்களை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையும் உயரும் தோல்வி இல்லாத மனிதன் எவருமில்லை. நீங்கள் சந்தித்த தோல்விகளில் இருந்து படிப்பினை கற்றுக்கொண்டு அதை வெற்றி பெறுவதற்கான படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும். நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்.( IAS) பயிற்சிக்கு சென்றதாகவும் ஐ.ஏ.எஸ்.( IAS) படிப்பதற்கு குடும்ப பின்னணி முக்கியமில்லை என்றும் கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம்.
 மேலும்,  தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் அது தான் வாழ்க்கையின் நோக்கம் எனவும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.    
 முன்னதாக, போஸ்கோ (POCSO) சட்;டம் மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Comments