திருவள்ளூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆண் புள்ளிமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு பூண்டி காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்,

திருவள்ளுர் மாவட்டம்



திருவள்ளூர் மப்பேடு அடுத்த வயலூர் கிராமத்தில் உள்ள 40 அடி விவசாய கிணற்றில் இன்று அதிகாலை  2 வயதுடைய ஆண் மான் ஒன்று தண்ணீர் குடிக்க கிணற்றில் இறங்க முற்படும் போது தவறி விழுந்த மான் நீண்ட நேரம் தண்ணீரில் நீச்சல் அடித்து வந்தது, அப்போது அப்பகுதியில்  விவசாயம் செய்து கொண்டிருந்த  விவசாயி ஒருவர் கிணற்றில் மான் விழுந்து இருப்பதைக் கண்டு  மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தவுடன் தீயணைப்புத் துறையினர் அந்த மானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர், மீட்கப்பட்ட மானை வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்,

Comments