பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்.



ஜூன் 30.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள தொழுதூர்  பேருந்து நிலையத்தில் டீசல், பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்தியில் ஆளுகின்ற பிஜேபி ஒன்றிய அரசை கண்டித்து விசிக கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில்  மங்களூர் ஒன்றிய பொருளாளர் தொழுதூர் இரா.ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு ஊரடங்கு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 7,500 ரூபாய் நிவாரணம் வழங்கிடு.

10 கிலோ உணவு தானியம்  இலவசமாக வழங்கு.

கொரோனா தடுப்பூசி தடையின்றி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கிடு.

செங்கல்பட்டில் தடுப்பூசியை தயாரித்த தமிழக அரசு அனுமதி வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் இடதுசாரிகள் கட்சிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

இதில் சிறப்பு சிறப்பு அழைப்பாளராக குணதொகையன், கருப்பையா, தடாகணேசன், பாண்டியன், பிரேம், பிரகாஷ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிரகாஷ், கருணாகரன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் பாரத வளவன், தொண்டரணி அமைப்பாளர் திருமா காசி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராசா, தொண்டர் அணி துணை செயலாளர் திருமேனி மற்றும் இடதுசாரி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments