திருக்கழுக்குன்றம் ஒன்றிய வெங்கம்பாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி இறந்த நிலையில் சடலமாக மீட்பு சட்ராஸ் போலீசார் விசாரணை
.
திருக்கழுக்குன்றம் ஜூலை 01
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் விவசாயி இவருக்கு மனைவி சாந்தி மற்றும் தீபா (15) தீட்சிதா (10) என இரண்டு மகள்களும், கோகுல் (7) என ஒரு மகனும் உள்ளனர். தீபா 12 ஆம் வகுப்பும், திட்சிதா 6 ஆம் வகுப்பும், கோகுல் 3 ஆம் வகுப்பும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். கொரோனா காரணத்தால் பள்ளிகள் திறக்கப்படாததால் குழந்தைகள் வீட்டிலேயே உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை கணேசன் வயலுக்கு சென்று விட அவரது மணைவி சாந்தி தனது இரண்டாவது மகள் தீட்சிதாவை அழைத்துக் கொண்டு மாலை 4.00 மணியளவில் அதே பகுதியில் உள்ள கணினி மையத்திற்கு மின்சார கட்டணம் செலுத்த சென்றார். மின்சார கட்டணம் செலுத்திவிட்டு தனது மகளை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு தங்களது இறைச்சி கடைக்கு சென்று விட்டார். வீட்டிற்கு மகள் திரும்பவில்லை என அறிந்த பெற்றோர் அக்கம் பக்கம் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். மகள் காணாததால் இது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 6.00 மணியளவில் சிறுமியின் வீடு அருகே உள்ள முட்புதரில் மாணவி தீட்சிதா மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாமல்லபுரம் டி .எஸ்.பி குணசேகரன், காவல் ஆய்வாளர்கள் முனிசேகர் (திருக்கழுக்குன்றம் ), நடராஜன் (மாமல்லபுரம் ), கோவிந்தராஜ் (தாழம் பூர்) ,மணிமாறன் (கேளம்பாக்கம் ) ஆகியோர் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் தீவிர விசாரனை மேற்க்கொண்டு வந்தனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் காவல் துறையினருடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள மூன்று இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள உறவினர் மற்றும் பொது மக்கள் வெங்கம்பாக்கம் கூட்ரோடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், விசாரணைக்காக அழைத்து சென்ற மூன்று இளைஞர்கள் குற்றவாளிகளாக இருக்க கூடும் என்பதால் இறந்த சிறுமியின் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம் சுமத்தினர், இரண்டு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்வோம் என காவல் துறையினர் உறுதி அளித்த நிலையில் உறவினர்களிடம் இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் விசாரணை முடிய என கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீசார் கூறியதை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்புடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர்
பிரகாஷ்.
Comments
Post a Comment