*கிருஷ்ணகிரி 15/05/21*
*உதவிக்கரம் நீட்டும் காவல் ஆய்வாளர் கற்பகம்!*
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட பூமலை நகர் கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவுபடி, பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆலோசனைப்படி பர்கூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் முக கவசம்,கபசுரக் குடிநீர்,அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை காவலர்கள் சுமதி,தனலட்சுமி, கிருஷ்ணவேணி காவலர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment