தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் வாழ்த்து

07.05.2021
தஞ்சாவூர்

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் தலைவர் இராதாகிருஷ்ணன்
செயலாளர் பென்சிங்
ஒருங்கிணைப்பாளர்
கம்பன் கவிரா
கூட்டாக வெளியிட்டுள்ள
அறிக்கையில்
கூறியிருப்பதாவது

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்
தனிப்பெரும்பான்மையுடன்
மாபெரும் வெற்றி பெற்று
தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கும்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கும்
அவரது 
தலைமையின் கீழ் புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும்
அனைத்து துறை அமைச்சர்களுக்கும்
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில்
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில்
பெருமை கொண்டு மகிழ்கிறோம்

கொரோனா பெருந்தொற்று பிடியில்
மக்கள் அவதிப்பட்டு வரும்
இந்த அவசரநிலை காலங்களில்
தொகுப்பூதிய அடிப்படையில்
அரசின் தலைமை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை மருத்துவர்களாக பணிபுரியும் நாங்கள்
கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ முன்கள பணியாளராக எங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம்.
கடைகோடி கிராமங்களில் வீடு வீடாக சென்று வயதுமுதிர்ந்த பிணியாளர்களுக்கான
இயன்முறை மருத்துவத்தையும்
இன்றளவும்
இந்த பெருந்தொற்று
நெருக்கடி நிலை காலத்திலும்
சிறப்பாக செய்து வருகிறோம்

கொரோனா நெருக்கடி காலத்தில்
முன்கள பணியாளராக
ஒப்பந்த அடிப்படையில் 
பணிபுரிந்து வந்த
1212 செவிலியர்களை சுகாதாரத்துறை சார்பில்
பணி நிரந்தரம்
செய்ததை
எங்கள் சங்கம் சார்பாக வரவேற்கிறோம்
மகிழ்கிறோம்,
அதே வேளையில்
மிகவும்
குறைந்த ஊதியத்தில்
நிறைவான மருத்துவ சேவை புரிந்து வரும்
எங்களுக்கு
எங்கள் உழைப்புக்கு ஏற்ற
நிறைவான ஊதியத்தை
உயர்த்தியும் மேலும்
பணி நிரந்தரம் செய்திடவும் வேண்டுகிறோம்

பெருந்தொற்றில் சிக்கி தவிக்கும்
தமிழக மக்களை மீட்க போர்கால அடிப்படையில்
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும்
உடனடியாக
பிஸியோதெரபி மருத்துவர்களையும்
மற்ற
துறை சார்ந்த மருத்துவ
காலி
இடங்களில்
பணியாளர்களையும் நியமித்து
அனைத்து பிணியாளர்களுக்கும்
மருத்துவ சிகிச்சை
மற்றும்
பிஸியோதெரபி மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்திடவேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறறோம்

மேலும்
தங்களது வெற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு
பிஸியோதெரபி மருத்துவர்களுக்கான
கவுன்சிலை 
நெறிமுறைபடுத்தி
கவுன்சிலானது 
திறம்பட செயல்பட வழிவகுக்க வேண்டும்

தமிழகத்தில்
நல்லாட்சி புரிந்திட வலிமைமிக்க
தலைவராக
முதல்வராக தாங்கள் பொறுப்பு ஏற்றிருக்கும்
இவ்வேளையில்
மருத்துவ முன்கள பணியாளர்களாகிய
பிஸியோதெரபி மருத்துவர்கள் 
எங்கள் வாழ்வும் ஏற்றம் பெறும்
என்ற
நம்பிக்கையில்
மீண்டும் ஒருமுறை தாங்கள்
முதல்வராக பதவியேற்றமைக்கு
எங்கள் வாழ்த்தையும்
மகிழ்ச்சியையும்
உரித்தாக்கி கொள்கிறோம்

Comments