ஏழை மாணவியின் செவிலியர் கனவு! கல்வியை தொடர உதவிய டிஎஸ்பி



12/05/21 உலக செவிலியர் தினம்,அதனை முன்னிட்டு செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக திண்டுக்கல் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார் அவர்கள், தாயை இழந்த ஏழை மாணவி பவித்ராவுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கியதோடு அவரது செவிலியர் படிப்பை தொடர கல்வி கட்டணம் செலுத்த உதவி செய்வதாக கூறி உற்சாகப்படுத்தினார்.     
மனிதநேயம் கொண்ட புற நகர் துணை கண்காணிப்பாளர் சுகுமார் அவர்களை திண்டுக்கல் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments