சிவகாசியில் நான்கு ரத வீதிகளில் ஊரடங்கை மீறி வலம் வரும் பொதுமக்கள் தொற்றுநோய் பரவும் அபாயம்



 சிவகாசி ஏப்ரல் 12

தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு,  பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தளர்வுகள் அறிவித்தது.  ஆனால் பொதுமக்கள் தொற்றின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் நோய் தாக்கத்தின் அபாயம் தெரியாமல் பஜார்களிலும், நான்கு ரத வீதிகளிலும் காய்கறி மார்க்கெட்டிலும் இடைவெளியின்றி குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளது.  காவல்துறையினரும் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் களமிறங்கி,  அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு 12 மணி வரை உள்ள தளர்வு நேரங்களில், நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Comments