சிவகாசி, நாரணாபுரம் கிராமத்தில் அரசு கால்நடை மருந்தகம் திறப்பு விழா கண்ட பிறகும், பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கும் அவலம்
சிவகாசி ஏப்ரல் 11
சிவகாசி வட்டாரத்தில் உள்ள நாரணாபுரம் பல கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பஞ்சாயத்து ஆகும். இப்பகுதி முழுவதும் மக்கள் விவசாயத்தை சார்ந்து இருப்பதால், கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை தேவை என்பதை விவசாயிகளும், பொதுமக்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்ததால், கடந்த 2018 - 2019 ஆம் நிதி ஆண்டில், நபார்டு வங்கியின் மூலம் 34.50 லட்சம் நிதி உதவி பெற்று, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம், அரசு கால்நடை மருந்தகம் கட்டி முடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், காட்சிப் பொருளாக இருந்து மூடியே கிடக்கும் அவலம் தொடர்கிறது. தற்போது அமைந்துள்ள புதிய அரசு, இப்பகுதி மக்களின் நன்மையைக் கருதி உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Comments
Post a Comment