பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் ஷட்டரில் ஏற்பட்ட பழுதை 20 மணி நேரம் போராடி பொதுப்பணித்துறையினர் சரி செய்து
பெரியகுளம், மே.12 - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை கடந்த 4ஆம் தேதி எட்டிய அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் அணையில் உள்ள நீர் திறக்கும் ஷட்டரை இயக்கி பார்த்த பொழுது ஷட்டர் பழுதாகி பாதியில் நின்றது. இதனால் அணையில் நீர்திறப்பு அதிகரித்து வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேறத் துவங்கியது. தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அணையின் ஷட்டரை பழுது நீக்கி நீரை அடைக்க முயற்சி செய்தும் தோல்வியடைந்ததால் அணையின் அவசரகால ஷட்டரை இயக்கி அணையிலிருந்து வெளியேறும் நீரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது இரவில் மழை பெய்து பணிகள் நிறைவடைந்தது. மேலும் அணைப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் அவசரகால சட்டத்தை இயக்க முடியாத நிலையில் கனரக ஜெனரேட்டர்களை கொண்டுவந்து இரவு இரண்டு மணிக்கு மேல் அவசரகால இயக்கி பாதி அளவு நீரை தடுத்த நிலையில் முதன்மைக் ஷட்டரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக 20 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அணையில் நீர் திறக்கும் முதன்மை ஷட்டரில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு அணையில் இருந்து வெளியேரி வந்த நீர் அடைக்கப்பட்டது. அணையில் ஷட்டர் பழுதாகி நின்றதால் 20 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் 16 அடிக்கும் மேல் குறைந்து 110 அடியானது. கோடையில் 3 ஆண்டுகளுக்கு பின்பு அணையின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஷட்டர் பழுதால் அணையின் நீர் மட்டம் 110 அடியாக குறைந்து நீர் வினாக ஆற்றில் சென்றது. அணையிலிருந்து வெளியேறும் நீர் சேறும் சகதியுமாக வெளியேறிதால் பெரியகுளம் நகராட்சி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள வடுகபட்டி, தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி மற்றும் 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் குடிநீர் சுத்திகரிக்கப்பட முடியாத நிலையால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
Comments
Post a Comment