தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக தாய், தந்தையரை இழந்த 18 வயது நிறைவடையாத குழந்தைகள் அல்லது தாய் தந்தை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் உள்ள பெற்றோர்களின், குழந்தைகளுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கும் பொருட்டு தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கி பராமரிக்க அரசின் நிதிவுதவி பெறும் தருமபுரி மாவட்டம் குறிஞ்சி நகர் வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே கொரோனா வைரஸ் தொற்றால் தாய் தந்தையரை இழந்தோ அல்லது தாய் தந்தையர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோ இருந்தால் அவர்கள் பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்கானிப்பு மைய எண்:1077 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்:04342-232234, 9486731458, குழந்தைகள் உதவி எண்:1098 என்ற எண்ணிற்கோ தகவல் தெரிவிக்க வேண்டுமென மாவட்டட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.பி.கார்த்திகா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment