பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் 17 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கொரோன தடுப்பு ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பெருகி வரும் கொரோனா நோய் தடுப்பது சம்மந்தமாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் ஆலோசனையின் படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அவர்களின் வழிகாட்டுதலின்படி கிராமப் பகுதியில் பெருகி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராமங்கள் தோறும் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், அநாவசியமாக வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு உற்றார் உறவினர் என்ற அடிப்படையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனாவின் வீரியத்தை எடுத்துரைக்க வேண்டுமாயினும், கிராமப்புற மாணவர்கள் கிரிக்கெட், சீட்டு, தாயம் போன்ற விளையாட்டுகள் மூலம் ஒன்று கூடி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், கொரோனா தொற்று பாதிப்புள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நோயின் வீரிய தன்மையை கண்டறிந்து முறையாக மருத்துவ உதவிகள் வழங்கிட முன்வர வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு உடையவர்களை தனிமைப்படுத்தி மற்ற நபர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் , கிராமப் பகுதிகள் தோறும் மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து கட்டுப்படுத்த வேண்டுமாயினும் கேட்டுக் கொண்டதோடு, கொரோனா நோய் ஒழிப்புப் பணியில் காவல்துறையுடன் இணைந்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாய் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களையும் அன்போடு கேட்டுக் கொண்டதோடு கொரோனா தொற்று மற்றும் கொரோனா நோயினால் உயிரிழப்பு என்ற நிலையை இல்லாமல் ஆக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுகுமாறன், ஜெயச்சந்திரன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment