தேவதானப்பட்டியில் அளவுக்கு அதிகமாக ஜெல்லட்டின் குச்சிகள் ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்


தேவதானப்பட்டி, அக்.23-  தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்ரோடு சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தேவதானப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜோதி சுப்பிரமணியன் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்தை நோக்கி வந்த TN 36 BZ 6000 என்ற பதிவெண் கொண்ட Pick Ub Explosives வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் அவற்றில் சுமார் 650 ஜெல்லட்டின் குச்சிகள், மற்றும் வெடிபொருள் கழிவுகள் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக 100 ஜெல்லட்டின் குச்சிகள் இருப்பது சோதனையின் போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ஜெல்லட்டின் குச்சிகள் அனைத்தும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட பகுதியில் உள்ள சுமார் 6 குவாரிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவை என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments