போடியில் திமுக மாணவரணி, இளைஞரணி சார்பில் அண்ணா பல்கலைகழக சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
போடிநாயக்கனூர்
அக்டோபர் 15
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி மற்றும் இளைஞரணி சார்பில் அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நீக்க கோயி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலை கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி துணை வேந்தர் சூரப்பா மத்திய பாஜக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்தியாவில் 2016-ம் ஆண்டு சிறந்த 10 பல்கலை கழகங்களில் 8 பல்கலை கழகம் உயர் சிறப்பு அந்தஸ்து பெற்று விட்டது. இதில் மேற்கு வங்காளத்தை சார்ந்த ஜாதவ்பூர் மற்றும் அண்ணா பல்கலை கழகம் சிறப்பு அந்தஸ்துக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜாதவ்பூர் பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என நிராகரித்துவிட்டார்.
இதனை அடுத்து, சென்னை அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் மாநில அரசு உதவி இல்லாமல் ஐந்து ஆண்டுகளில் 1500 கோடி வசூல் செய்து கொள்ளும் தனித் தன்மை உடைய காரணத்தினால் அண்ணா பல்கலை கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த காரணத்தினால் திமுக தலைவர் ஸ்டாலின் இவை மாநில அரசின் கல்வி உரிமையை பறிக்ககூடிய செயல் என்றும், துணைவேந்தர் என்றால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட யார் அதிகாரம் கொடுத்தது என அதிரடியாக கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் மாநில திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக மாணவரணி, இளைஞர் அணி படைகளுடன் தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், போடியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலும், போடி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முன்னிலையில் நூற்றுக்கணக்கணக்கான திமுக மாணவர் அணி மற்றும் இளைஞர்கள் பட்டாளத்துடன் அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் போடி அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தளபதியின் கண்டன அறிக்கையினை தொடர்ந்து, மோடி அரசே, மாநில அரசின் கல்வி உரிமையினை பறிக்காதே என்றும், உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை, பழமையான அண்ணா பல்கலை கழகத்தினை மத்திய அரசிடம் ஒப்படைக்க விட மாட்டோம் என்றும், மாநில அதிமுக அரசு சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் , மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் 65 விழுக்காடு மாணவர்களின் கல்வி உரிமை தமிழகத்தில் பறிக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்றும், வெல்லட்டும் திமுக மாணவ, இளைஞரணி போராட்டம் என்று தங்கதமிழ்ச் செல்வன் ஆக்ரோஷமாக கோசங்களை எழுப்பி கண்டண ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டார். இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தீபன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், இளைஞர் அணி அமைப்பாளர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment