போடி அரண்மனை அருகில் அமைந்துள்ள கட்டபொம்மன் வளாகத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது

போடிநாயக்கனூர்,
அக்டோபர் 16
    
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி அதிமுக  சார்பில்  வீரபாண்டிய கட்டபொம்மன் 221வது நினைவு நாளையொட்டி, போடி அரண்மனை அருகில் அமைந்துள்ள கட்டபொம்மன் வளாகத்தில்   மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  



போடியில் உள்ள கட்டபொம்மன் முழு உருவ சிலைக்கு  தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
   
இந்நிகழ்ச்சிக்கு போடி நகர செயலாளர் பழனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்,மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரித்தா, ஒன்றிய யூனியன் சேர்மன்  சுதா,தேனி ஒன்றிய செயலாளர் கணேசன்,போடி ஒன்றிய செயலாளர் சற்குணம்,சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன்,கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, உட்பட போடி நகர, ஒன்றிய, நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .

Comments