வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்


தர்மபுரி மாவட்ட  09

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் டாக்டர் தேவராஜ் தலைமையில் திண்டுகல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தில் மருத்துவர் சமுதாயத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், தமிழக அரசை இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தாமதமாகும்  பட்சத்தில் உயர் நீதி மன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை எடுத்து விசாரிக்க கோரியும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் மற்றும் சவரத்தொழிலாளர் கட்சியினரும் தமிழக முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்து இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.