ஒரு லட்சம் பனை விதை நடவு திருவிழா

வேதாரணியம். அக்.22.

நாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதை நடவு என்னும் இலக்குடன் பனை விதை நடதொடங்கியுள்ளனர்

இதில் முதல் கட்டமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்காலடி கிராமத்தில் ஐந்தாயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்

அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட பனை விதை நடவு திருவிழா நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் 10000 பனை விதைகளை நடவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியை நாகப்பட்டினம் மாவட்ட வன மற்றும் உயிரின காப்பாளர் திரு.கலாநிதி IFS அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  தமிழரசி (ஒன்றிய பெருந்தலைவர்), மாசிலாமணி ஒன்றிய கவுன்சிலர், .செல்வராஜ் ஊ ம தலைவர்,  ஆகியோர் கலந்து கொண்டனர்

 இந்த நிகழ்ச்சியியை நாகப்பட்டினம் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் ராஜசரவணன், அறங்காவலர்கள் .லெட்சுமணன்,  கர்த்திக், ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் தலைவர்  மகேந்திரன், ஒருங்கிணைபாளர்கள் திரு. மாரியப்பன், திரு. பண்டரிநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்

மேலும் இந்நிகழ்வில் பொது மக்களுக்கு பனை மரத்தை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ள பட்டது..

திரு.கலாநிதி IFS அவர்கள் பனை மற்றும் பனை பொருட்களை பற்றியும் மேலும் காடுகளை, வன உயிரினங்களின் பாதுகாப்பு பற்றியும் அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்

பனை விதை நடும் ஆர்வம் கொண்ட  இயற்கை ஆர்வலர்கள் நாகப்பட்டினம் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையை தொடர்பு கொண்டால் பனை விதைகளை வழங்க தயாராக உள்ளோம் என அதன் நிறுவனர் .ராஜசரவணன் தெரிவித்தார்....

Comments