சாத்தூர் அக் 30,
விருதுதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரின் தெற்கு பகுதியில் வைப்பாறு செல்கிறது இந்த ஆறு மேற்க்கு தொடர்ச்சி மழையில் உற்பத்தியாகி சாஸ்தாகோவில்,அச்சங்குளம், வெம்பகோட்டை, சாத்தூர், இருக்கண்குடி,வழியாக சென்று வேம்பாறு பகுதியில் கடலில் கலக்கிறது.
இந்த ஆறு பயணித்து வரும் பகுதியில் வெம்பக்கோட்டை, மற்றும் இருக்கண்குடியில் நீர் தேக்கங்கள் உள்ளன இந்த இரண்டு நீர் தேக்கத்தில் அமைக்கபட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் சாத்தூர் மற்றும் சிவகாசி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக பருவமழை போதியளவு மழை பெய்யவில்லை வைப்பாற்றில் மழை காலங்களில் மழை நீர் செல்லாமலும் ஆற்றின் உட்பகுதிகளில் தேங்கியிருந்த மணல்கள் முழுவதும் மணல் திருடர்களால் திருடி செல்லபட்டு விட்டன.
இதனால் கிடைக்கும் கொஞ்ச நீரும் ஆற்று பகுதியில் தேங்காமல் வெளியேறி அங்கு அமைக்கபட்டுள்ள ஆழ்துளை கினறுகளில் தண்ணீர் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் தினறி வருகிறது.
ஆகவே சாத்தூர் நகராட்சி நிர்வாகம் நகராட்சி பகுதிகளில் உள்ள அண்ணாநகர்,படந்தால்,மேலக்காந்தி நகர்,கீழக்காந்திநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் சாத்தூர் வைப்பாற்றில் கலந்து வருகிறது.
ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து கழிவு நீர் வேறு வழியாக செல்வதற்கு வழி செய்ய வேண்டிய நிர்வாகம் கண்டு கொள்ளாமல் பாராமுகத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆற்று பகுதி முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுபாட்டிலும் அதை பராமரிக்க வேண்டி பொதுப்பணித்துறையினர் அலச்சியத்துடன் கழிவு நீர் கலப்பதை தடுக்காமல் வைப்பாறு பாழ்பட்டு கழிவு நீர் ஆறாக மாறி வருகிறது.
குடிநீர் ஆழ்துளை கினறுகளை சுற்றி கழிவு நீர் தேங்கியிருப்பதால் தண்ணீர் மாசடைந்து மக்களுக்கு பலவித நோய் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்
Comments
Post a Comment