ஸ்ரீமுஷ்ணம் . அக் 20 ;
ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு பகுதியில் 500 மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, இப்பகுதியில் போடபட்டுள்ள டிரைனேஜ் வருடம் ஆகாத நிலையில் தற்போது பெய்த மழையில் டிரைனேஜ் பணிகளின் ஊழல் சாயம் வெளுத்து விட்டது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
டிரைனேஜ் போடபட்டுள்ள இடங்களில் அடிதளத்தில் சிறிதளவு கூட சிமெண்ட் போடாத நிலை , எந்த பிடிப்பும் இல்லாத காரணத்தினால் டிரைனேஜ் தடுப்பு சுவர்கள் விழும் நிலையில் உள்ளாதகவும் , அடிதளத்தில் மண்களை மட்டுமே கொண்டுள்ளதால் அடர்ந்த காடுகளாக வளர்ந்து விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது என வேதனை அடைந்துள்ளனர் அப்பகுதி மக்கள் .
பல லட்சம் ரூபாயில் பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு அறிவித்த திட்டத்தில் சில அதிகாரிகளின் கவன குறைவால் மொத்தமாக அதிருப்தியை அளித்திருக்கிறது,அது மட்டும் அல்லாமல் டிரைனேஜ் பணிகள் முறையாக வேலை முழுதும் முடிந்து விட்டதா ? என தெரியாத நிலையில் ஒப்பந்த பணிகளில் மொத்த பணத்தையும் கொடுத்து விட்டதாக ஒரு தரப்பினர் அதிகாரபூர்வமாக
கூறுகின்றனர்.பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், நடவடிக்கை எடுக்கவிட்டால் அப்பகுதி மக்கள் சட்ட ரீதியான போராட்டம் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர் .டிரைனேஜ் அடித்தளத்தில் எந்த ஒரு பிடிப்பும் அல்லாது சிமெண்ட் போடாத நிலையில் தற்போது பெய்த மழையில் டிரைனேஜ் அருகே உள்ள வயல்களில் நீர் புகுந்ததால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் அலட்சியமா ? பணி முழுதும் நிறைவு பெறாத நிலையில் பணம் எப்படி போனது ? அடிதளம் இல்லாமல் டிரைனேஜ் தரம் எப்படி இருக்கும் ?குறுகிய நாளில் தடுப்பு கட்டை உடைவது தரமான பணியா ? யார் உடந்தை ? மக்கள் நலனுக்காக அதிகாரிகள் இல்லையா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? தமிழக அரசு தலயிடுமா ? இப்படி பல கேள்விகளோடு நீதி வெல்ல வேண்டும் , உண்மை வெளி வர வேண்டும் என காத்திருப்பதாக சமூக ஆர்வலர்களும் , அப்பகுதி மக்களும் கூறுகின்றனர் .
Comments
Post a Comment