திருவள்ளூரில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் இன் புகைப்படங்கள் சேகரிக்கப்படும் என தகவல்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அக்டாபர் 21 திருவள்ளூரில் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்னிய நபர்கள் மற்றும் குற்றச் செயல் புரிந்த நபர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, தங்கள் கைபேசியில் சந்தேக நபர்களை படம் பிடித்து, அவர்களின் புகைப்படத்தை FACETAGR PATROL என்ற செயலியில் புகைப்படத்தை ஒப்பிடும்போது, ஏற்கனவே குற்றம் புரிந்து நபரின் முகஅவயங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, குற்றம் புரிந்தவர் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவி புரிகிறது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அரவிந்தன்   திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சிமூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணிய நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருக்கும். FACETAGR PATROL App-ல் மொத்தம் 60,000 குற்றவாளிகளின் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் பாண்டிச்சேரி, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளும் அடங்குவர்.


Comments