திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு புதிதாக வரவேற்பு அறை திறப்பு
திண்டுக்கல்.16
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான புகார் மனுக்கள் கொரோனா தொற்றை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் முன்பு சாமியானா அமைக்கப்பட்டு இதுவரை பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்களின் நலனுக்காக புதிதாக அமைக்கப்பட்டிருந்த வரவேற்பறையினை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் எம்.எஸ் . முத்துச்சாமி , இ.கா.ப. , அவர்களால் இன்றுதிறந்துவைக்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திருமதி . ரவளிப்ரியா இ.கா.ப. , மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இனிகோதிவியன் , வெள்ளைச்சாமி மற்றும் காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர் .
Comments
Post a Comment