அண்ணா பல்கலை கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி


தர்மபுரி  மாவட்டம்

தருமபுரி மாவட்டம் நூலஅள்ளி கிராமத்தில் அரசு விழா ஒன்றில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பின் போது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் எனவும் சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும், சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும். எனவும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது. இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என  அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியில் தெரிவித்தார்.

Comments