தேவதானப்பட்டி அருகே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த கருத்தரங்கம்

 
தேவதானப்பட்டி, அக். 24 -தேனி மாவட்டம் தேவதானப்பட்டி  அருகேயுள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.தேனி மாவட்ட காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கத்திற்கு திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமி IPS, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியம் பல்லவி பல்தேவ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் 18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு மது வழங்கப்பட இயலாது என்ற அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரவிடுமாறு திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர்  தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொண்டார்.இக் கருத்தரங்கத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக விளம்பர பதாகைகள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட  நீதிபதி அப்துல் காதர், மாவட்டமகிளா நீதிமன்ற நீதிபதி வெங்கடேன், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ராதா, ஆகியோர் பாலியல் வன்முறை குற்றங்களுக்கு எதிரான கருத்துக்களையும், சட்ட வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் குழந்தைகள் நல அலுவலர்கள், மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேனி மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ராஜேந்திரன், காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வாளர் .முருகானந்தம், பெரியகுளம் சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், காவல் ஆய்வாளர்கள், சுரேஷ், . ஜோதிபாபு, . சுகுமாறன் , குரு வெங்கட்ராஜ், காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள், பெண் குழந்தைகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments