அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

*நத்தம்:16

சாணார்பட்டி அருகில் எமக்கலாபுரம் கிராமத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் 89வது பிறந்தநாளை முன்னிட்டு 89 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்பட்டது, இவ்விழாவிற்கு எமக்கலாபுரம் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்,சாணார்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் வாசு  முன்னிலை வகித்தார், அறக்கட்டளை செயலாளர் சுப்பிரமணியன்  வரவேற்றார் . 
சிறப்பு அழைப்பாளராக நத்தம் சட்டமன்ற எம்எல்ஏ . ஆண்டி அம்பலம், தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் , தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித்தொடர்பாளர் முனைவர் முருகேசன் , தமிழ்நாடு கூட்டுறவு அச்சகம் பணியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் கணேசன், சாணார்பட்டி B.D.O வாசுகி, சாணார்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன், மீனாட்சிசுந்தரம், ஜெம் லயன்ஸ் கிளப் தலைவர் வெங்கடேஷ்  , மதர் தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் லலிதா ,   பசுமை பாதை சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை வழங்கப்பட்டு நடப்பட்டது, மதுரை கலாம் , ஒருங்கிணைத்தார். பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெரால்டு  நன்றி கூறினார்.

Comments