கடலூர் மாவட்டம்
திட்டக்குடி:அக்-21
திட்டக்குடி வட்டம் மங்களூர் வட்டாரத்தில் பருவ மழை இல்லாத காலங்களில் பயிரிடப்படும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஊக்கத்தொகை ஏக்கருக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் 2020 -2021 திட்டத்தில் பருவம் இல்லாத காலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி மங்களூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 750 ஏக்கர் பொருள் இலக்கு மற்றும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தில் வெங்காயம், தக்காளி, கத்தரி ,முருங்கை, மிளகாய் ,கீரை வகைகள் அவரை மற்றும் பல்வகை காய்கனி சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது புகைப்படம் ,ஆதார் அட்டை நகல் ,குடும்ப அட்டை நகல் ,கணினி பட்டா, அடங்கல் வங்கி புத்தகம் நகல், காய்கறி பயிரிடப்பட்ட தோட்டத்தின் புகைப்படம் காய்கறி விதை அல்லது நாற்று வாங்கிய ரசீது ஆகிய ஆவணங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தோட்டக்கலை உதவி அலுவலர்களின் கைபேசியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
Comments
Post a Comment