ஸ்ரீமுஷ்ணம் . அக் 13 ;
ஸ்ரீமுஷ்ணம் அதன் சுற்று பகுதிகளில் அரசு துறை சார்ந்த சிறந்து பணியாற்றிய பணியாளர்களை தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது .
இதில் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவில் உள்ள அனைத்து ஊர்களிலும், கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு துறைகளான காவல்துறை, வருவாய்த்துறை, பொது சுகாதாரத் துறை, பேரூராட்சி நிர்வாகம், தீயணைப்புத்துறை, துப்புரவு மற்றும் தூய்மை காவலர்கள் பணிகளில், கொரோனா காலத்தில் சேவை மனப்பான்மையோடு சிறந்த பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 90 க்கும் மேற்பட்டவர்களை பாராட்டும் விதமாக "விருதுகள் 2020" என்ற பெயரில் ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்கத் தலைவர் ரவிசுந்தர் தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனரும் தாளாளருமாகிய அரிமா மாவட்ட தலைவர் எம்.எஸ்.செங்கோல், சண்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்டத் தலைவர் பூவராகமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனரும், ஸ்ரீமுஷ்ணம் நகர அரிமா சங்க துணைத்தலைவரும் ஆகிய சாலை.கனகதாரன் அனைவருக்கும் பதக்கங்கள், கேடயங்கள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிப் பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட துணை ஆளுநர் சுரேஷ்நீலகண்டன் விருது பெற்றவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயவேல், வேல்முருகன், ஜவகர் நாராயணசாமி, சீனு.ராஜேந்திரன், சிவானந்தம், முன்னாள் செயலாளர் ரவிச்சந்திரன், இந்நாள் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிறைவில் அரிமா பொருளாளர் வில்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.