ஸ்ரீமுஷ்ணம் . அக் 10 ;
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், மேலவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் அசோக்குமார் மாவட்ட செயலாளர் சசிக்குமார் பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் பாமக வழக்குரைஞர் இளையராஜா தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றும் வகையில் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வள்ளலார் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபட்டது .
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவக்குமார்,வெற்றிவேல்,சேகர்,கண்ணன்,பாண்டியன்,உத்தமராசா,சந்தியாகு,போஸ்,அஜீத் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் .