போடிநாயக்கனூர்,
அக்டோபர் 12
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தேவர் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயத்தினையும், விவசாயிகளையும் சீரழிக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததையும், தொழிலாளர் சட்டங்களை சிதைத்து தொழிலாளர்களின் அடி வயிற்றில் அடித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக மோடி அரசையும், அதற்கு துனை போன மாநில அரசையும் எதிர்த்து கோசங்களை எழுப்பினர்.
மேலும் இந்த புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு ,அரசு கொள் முதல் இனி இல்லை என்றும், பதுக்கல் கள்ளச் சந்தைக்கு வித்திடும் , விவசாயத்திற்கு இலவச மின்சாரம் பறிப்பு மற்றும் கார்பரேட்டுகளுக்கு சாதகமாக செயல்படுவதையும் எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி முருகன் தலைமையில் போடி நகர செயலாளர் முருகேசன், போடி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், போக்குவரத்து இடைக்குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.கட்சியின் நகர துணைச்செயலாளர்கள் சத்தியராஜ்,சுந்தர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் சபரிநாதன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.