ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனைக் கூட்டம் சேர்மன் லோகிராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மத்திய அரசு 15வது நிதிக்குழு மானியத்தை விடுவித்த பிறகும் மாநில அரசு வழங்காத தால் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றும்  மேலும்
15வது நிதிக்குழு மானியத்தை பெறுவதற்கு அலட்சியம் காட்டும்  ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Comments