திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மணக்குப்பம் கிராமத்தில் வேந்தன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அக்-21
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மணக்குப்பம் கிராமத்தில் வேந்தன் அறக்கட்டளை மற்றும் வேந்தன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை மற்றும் மணக்குப்பம் கிராமத்தில் வேந்தன் மருத்துவமனை தொடங்கி மக்களுக்கு சிறப்பான முறையில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் வேந்தன் அறக்கட்டளை மற்றும் வேந்தன் மருத்துவமனை சார்பில் நிர்வாக இயக்குனர் தேசவேந்தன் ஏற்பாட்டில் பல கிராமங்களில் ஏழை மக்களுக்காக இலவச மருத்துவ முகாமை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணக்குப்பம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாமை வேந்தன் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி டாக்டர்.காவியவேந்தன் தொடங்கிவைத்தார். இந்த முகாமில் மருத்துவர்கள் அய்யனார், ஜனனி கலந்துகொண்டு நோயாளிகளுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, உடல்பருமன் உள்ளிட்ட பரிசோதனைகளை நோயாளிகள் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர். இதில் தன்னார்வலர்கள் சரவணப்பாக்கம் சிவராஜ், பெரியசெவலை சாரதி, லோகு, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment