கோடியக்கரையில் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கும் வரை வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவிப்பு


வேதாரணியம். அக்.30.

 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த 
 கோடியக்கரையில் தங்கி வெளியூர் மீனவர்கள் மீன்பிடிப்பதால் உள்ளுர் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வெள்ளப்பள்ளம் ..வானவன் மகாதேவி ..ஆறுகாட்டுத்துறை ..மணியன் தீவு.. அண்ணா பேட்டை ..சிறுதலை காடு ..கோடியக்காடு மீனவர்கள்  அறிவித்துள்ளனர்...

Comments