போடியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
போடி நாயக்கனூர்,
அக்டோபர் 10
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிக்னலின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தேனி மாவட்ட கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.
தற்பொழுது வேகமாக பரவி வரும் கொரோனா காலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், வங்கி போன்றவற்றிற்கு அடிக்கடி சென்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால் கொரோனா கண்களுக்கு தெரியாமல் வேகமாக பரவக்கூடும் அபாயம் உள்ளது. இத்தகைய காரணத்தினால் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக மூன்றடுக்கு சர்ஜிக்கல் முகக் கவசங்களை வழங்கி, நோய்தடுப்பு முறைகள், சமூக இடைவெளி போன்றவற்றினை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். மேலும் இவ்வாறு ஒவ்வொரும் சமூக பொறுப்போடு கொரோனா நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே விரைவில் கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.. உடன் போடிநாயக்கனூர் DSP பார்த்தியன், போடி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.