தேனி, அக்.16 -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுத் துறை நிறுவன பங்குகளிலும், மத்திய அரசு பணிகளில் எஸ்.சி, எஸ்.டி. ஒ.பி.சி பிரிவினருக்கு சட்டரீதியாக குறைப்பதை கண்டித்தும் முறைகேடாக நடைபெற்ற வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்ய கோரியும் இடஒதுக்கீட்டு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன், கோமதி, சிவநேசன், அன்பு வடிவேல், செல்வராஜ், தங்கவேல், ஈஸ்வரன், ராஜதுரை, ஆண்டி, ஜோதிமுருகன், செல்ல தம்பி, இளமதி, ஆண்டவர், முத்துராமன், பெர்க்மான்ஸ், ஆரோக்கியம், உதயக்குமார், முல்லை மாரிமுத்து பெரியசாமி தளபதி, கருத்தையன், வசந்த், சையது, லோகேஸ் கருத்த பாண்டி, வீர தெய்வம், வெற்றி செல்வன், வீர பிச்சை, சண்முகம், கார்த்தி , மணிபாரதி, வெற்றி , பழனிவேல், குருசாமி, தமிழ்செல்வன், முத்துச்சாமி, கருப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
Comments
Post a Comment