தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பங்கேற்பு


தேவதானப்பட்டி, அக். 08-தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதானபாலியல்  வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் 
தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 
நடைபெற்றது. 
தேனி மாவட்டத்தில் பாலியலில் குற்றங்களில். ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கையின்  அடிப்படையில் சட்டம் பாயும், 
குற்ற செயல்களை மறைக்காமல் உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க காவலன் செயலி  எண் 9176104100 . எஸ்.ஓ.எஸ் செயலி வெளியிட்டு அவர்  வாட்ஸ் ஆப் மூலம் அவசர காலங்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும், 
புகார் அளிக்கும் நபர்களுடைய பெயர் மற்றும்  ஊர் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும்  தெரிவித்தார். அதேபோன்று குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும் தகவல்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் மேலும்
இதுவரையிலும் தேனி மாவட்டத்தில் பாலியல் குற்ற  செயல்களில் ஈடுபட்ட  59 நபர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் 59 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு  நீதிமன்றம் மூலம் மூன்று குற்றவாளிகளுக்கு  போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும்  3 குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு சிறைத் தண்டனையும்.வழங்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.மேலும் இனி வரும் காலங்களில் பாலியல் வழக்கில் குற்றம் புரியும் நபர்கள் மீது கடுமையான வழக்கு உடனடியாக பதிவு செய்யப்படும் என்பதனையும் தெரிவித்தார்.உங்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறினார்
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அதேபோன்று தேனி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் காவலர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எருமலைநாயக்கன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
இந் நிகழ்ச்சியில்  
பெரியகுளம் 
காவல்துறை  துணைகண்காணிப்பாளர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் சங்கரன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, சத்யநாராயணன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சுரேஷ் குமார் மாவட்ட குழந்தைகள் நல குழுமம். சேர்மன் தேனி, சண்முகவடிவு மாவட்ட சமூகநல அலுவலர் தேனி 
மற்றும் பால்ராஜ் ஊராட்சி தலைவர் எருமலைநாயக்கன் பட்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். பள்ளிக் குழந்தைகள்., பெற்றோர்கள்,  காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள்உட்பட பலர்  கலந்து கொண்டனர்.