காவலர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்காக காவல்துறையினரின் குடும்பங்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

திண்டுக்கல் 26

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 25.10.2020 ம் தேதி மாலை நடைபெற்ற காவலர் வீரவணக்க வார விழாவை முன்னிட்டு காவலர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்காக காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவலர்களின் இன்னிசை கச்சேரியும், குழந்தைகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு  திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ் முத்துசாமி இ.கா.ப அவர்களும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப் பிரியா இ.கா.ப அவர்களும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்கள்.

Comments