போடி பகுதியில் திமுக சார்பில் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டம்,
போடி ஒன்றிய தி.மு.கழகத்தின் சாா்பாக முப்பெரும் விழா சிறப்புற நடத்துவது பற்றி,
போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,
ஒன்றிய கழக செயலாளருமான லட்சுமணன் தலைமையில்
போடி ஒன்றிய கழக செயல் வீரா்கள் கூட்டத்தில்,
எதிர்வரும் காலங்களில் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, கழக செயல்பாடுகள் போன்றவற்றினை குறித்து
தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளா் தங்கதமிழ்செல்வன், தேவாரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  இராசிங்காபுரம் மங்களம் மண்டபத்தில்
நீண்ட  உரையாற்றினாா்.
உடன் முன்னாள் ஒன்றியக்குழுதலைவா் செல்வன், ஒன்றிய அவைத்தலைவா் பாண்டுரெங்கன், மாவட்ட துணைச்செயலாளா் மயில்தாய் அன்புச்செழியன் மாநில தலைமை செயற்குழு உறுப்பினா்கள் சஙகா்,அரசேந்திரன்,
தேனி ஒன்றிய கழக பொறுப்பாளா்சக்கரவா்த்தி,
மாவட்ட முன்னாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா்
தேனி மணிமாறன்
மற்றும்  ஒன்றிய கழக நிா்வாகிகள் கழகத்தோழா்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனர்.

Comments