தேனி,
அக்டோபர் 23
தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு புதிய உறுப்பினர்களை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் மூலம் 2020 ல் இருந்து 2023 வரை மூன்று வருடங்களுக்கு புதிய உறுப்பினர்களாக போடியை சார்ந்த முன்னால் லயன்ஸ் சங்க தலைவர் குறிஞ்சிமணி மற்றும் ஏ.ஹெச்.எம். டிரஸ்ட் முகம்மது இப்ராஹிம், ஜீவன் ஜோதி நல மைய இயக்குனர் அனஸ்தீசியா,தேனி ராமுத்தாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் வன் கொடுமை தடுப்புச் சட்டம் நடைமுறைபடுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்து அவக்கை சமர்ப்பித்தல் போன்ற பணிகளில் இக்குழுவினர் ஈடுபடுவார்கள். மேலும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான இக்குழுவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Comments
Post a Comment