பெரியகுளம் சோத்துப் பாறை அணையிலிருந்து விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் மற்றும் குடிநீர்த்தேவைக்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்

பெரியகுளம், அக்.26 -தேனி மாவட்டம், பெரியகுளம், சோத்துப்பாறை அணையிலிருந்து நன்செய் மற்றும் புன்செய்விவசாய நிலங்களின் பாசனத்திற்கும், நகராட்சிக் குடிநீர்த் தேவைக்காகவும், வேளாண் விவசாயிகள், மற்றும் பொதுமக்களிடமிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து 'தமிழக முதல்வர் எடப்பாடி .பழனிச்சாமி அவர்கள் தண்ணீர் திறந்து விட அறிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இன்று மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நீர் மதகின் இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
இன்று, முதல் போக சாகுபடிக்காக 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங் களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர்த் தேவைக்கும் சேர்த்து இன்று 26.10.2020 முதல் 15.03.2021 வரை 51 , நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31,நாட்களுக்கு விநாடிக்கு 27, கன அடி வீதமும், கடைசி 59, நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதம் மொத்தம் 331.95 , மில்லி கன அடிக்கு மிகாமல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும்,
இதனால் மொத்தம்2,865, ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும் எனவும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்,
மாவட்ட ஆட்சித் தலைவர்,ம பல்லவி பல்தேவ், பெரியகுளம் கோட்டாட்சியர் சினேகா தேனி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  STK ஜக்கையன்  பொதுப்பணித் துறை பொறியாளர்கள், அலுவலர்கள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அ.தி. மு.க, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments