தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேளாளர் என்கிற பெயரை மாற்று சமுதாயத்துக்கு வழங்கக்கூடாது என்று கூறி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனி, அக்.09-
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வேளாளர் என்கின்ற சமுதாயத்தின் பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக்கூடாது என்று கூறி வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் சரவணன் தலைமையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆறு சமுதாயங்களை உள்ளடக்கி பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றவும் தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயரில் அரசாணை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனை கண்டித்து பல வேளாள சமுதாய சங்கங்களும் தங்களது சமுதாயப் பேரான வேளாளர் என்கிற பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்க கூடாது என்றும் அரசாணை இல்லாத நிலையில் தங்களது சமுதாயப் பெயரை பயன்படுத்துவதை கண்டித்தும், அதற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். எதிர்பாராத விதமாக பிற மாவட்டங்களிலிருந்தும் ஆட்கள் வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சுமார் 15 நிமிடம் தேனி மதுரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது. காவல் துறையின் சமாதானத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழக செயலாளர் எம்.என்.பி ராஜா மாநில இளைஞரணி செயலாளர் நெல்லை பந்தல் ராஜா மாநில மகளிரணி தலைவி சகிலா கணேசன் மற்றும் ஆடிட்டர் முருகேசன் மற்றும் தேனி மாவட்டம் உள்ள வேளாளர் சமுதாய மக்கள் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மதுரை திண்டுக்கல் ஆகிய பகுதியில் இருந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். எதிர்பாராத விதமாக சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.