திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் அக்டோபர் 22 திருவள்ளூரில் இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தியாகி நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு காவல் பணியின் போது பல்வேறு சூழ்நிலைகளில் தன் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. அரவிந்தன் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு சூழ்நிலைகளில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் மக்களுக்காக ஓயாத பணிபுரியும் காவலர்களின் சில சூழ்நிலைகளில் பாதுகாப்பு பணியின் போதும் வாகனத்தில் போகும் போதும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தும் காவலர்களின் சிலர் எதிர்பாராத சூழ்நிலையில் உயர் தியானத்தை செய்தனர் அதேபோல் இதை உணர்த்தும் வகையில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் காவலர் வீர வணக்க நாள் கொண்டாடப்பட்டது.
Comments
Post a Comment