என்னை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் வர்மன் பரபரப்பு பேச்சு

சாத்தூர் அக் 20,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார்  மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்து  விடுவதாக மிரட்டுகின்றனர் என்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசினார்.     
விருதுநகர் மாவட்டம் அதிமுகவை கட்சியின் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க இருப்பதாக  கடந்த 8 மாதங்களாக பேச்சுக்கள் உலாவந்தது. தற்போது மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர்  மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.    
பொது  வெளியில் அவர் பேசிய சில கருத்துகள் கட்சியின் தலைமைக்கும்  பெரும் பிரச்சனைகளை உருவாக்கியதால்  அவரை  கட்சி தலைமை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.  
அதன் பின்பு மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவர்மன் தலைமையிடத்தில்  கேட்டு  போராடி வந்தார்.ராஜவர்மனுக்கு விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்து விடக்கூடாது என அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தன்னால் ஆனா அனைத்து வழிகளையும் செய்துவந்தார்.   
 அது வரை இரண்டை குழல் துப்பாக்கியாக பயணித்து வந்த அமைச்சர் இராஜேந்திரபாலாஜி சாத்தூர்  சட்டமன்ற உறுப்பினர் ராஜாவர்மனும் எதிர் எதிர் திசையில் பயணிக்க தொடங்கினர்.    
சாத்தூர் தொகுதியில் இரு தரப்பினரும்  தனி தனியாக கட்சி நிகழ்ச்சிகளை நடத்தினர்.  மாவட்ட செயலாளர் பதவி இல்லாமல் இருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  எப்படியாவது மாவட்ட செயலாளராக ஆகி விட வேண்டும் என தனக்கு தெரிந்த அணைத்து வித்தைகளையும் பயன்படுத்தி மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவியை பிடித்தார்.   
 இருந்தாலும்  மாவடட்த்தை இரண்டாக பிரித்து தனக்கு ஒருபகுதியை தலைமை தனக்கு வழங்கும் என்ற நம்பிகையில் ராஜாவர்மன்  இருந்து வந்தார்.  தற்போது வரை அது கிடைக்கவில்லை .சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் தரப்பினர் சாத்தூரில்  வைத்து பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாக கூட்டம் நடத்தினர்.   
அதில் பேசிய சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி சட்டமன்ற உறுப்பினரின் வாழ்கையை பற்றி விமர்சனம் செய்துள்ளனர். அதன் பின்பு  நேற்று இரவு  தனியார் திருமண மன்டபத்தில்  ராஜாவர்மன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜாவர்மன் மேடையில் பகிரங்கமாகவே அமைச்சரின் ஆட்கள் என்னை கூலிபடை வைத்து வெட்டி கொலை செய்து விடுவதாக கடந்த பல மாதங்களாக மிரட்டி வருகின்றனர். நான் என்ன தவறு செய்தேன். எனக்கு இந்த பதவியை பிச்சை போட்டாதாக சொல்லி வருகிறார்கள். அப்படி சொல்பவர்கள் எனக்கு பிச்சை போடவில்லை ஒருகினைப்பாளர் பண்ணீர் செல்வம் ,துனை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் கொடுத்தார்கள் என்று பேசினார்.

Comments