தடையை மீறி படகு சவாரி செய்த நகராட்சி ஊழியரின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்


திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானல் வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த மார்ச் முதல் வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது இதில் தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் சுற்றுலா தளங்களுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் செல்லலாம் என அறிவித்திருந்தது இதில் கொடைக்கானலில் பூங்காவிற்கு மட்டும் தற்போது அனுமதி உள்ளது இதில் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான நட்சத்திர ஏரி அதேபோல் வனத்துறைக்கு சொந்தமான தூண் பாறை.தற்கொலை பாறை பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து இருந்தது இந்நிலையில் தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர் ஆனால் நகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் யாருக்கும் அனுமதி கிடையாது அதே போல் படகு சவாரியும் கிடையாது என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவித்திருந்த நிலையில் இன்று நகராட்சி ஊழியர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக விருதுநகரிலிருந்து வந்தவர்கள் அவர்களாக ஏரியில் இருந்த நகராட்ச்சி படகு குழாம் படகுகளை இயக்கி சுமார் 4 கிலோ மீட்டர் வரை ஏரியில் சுற்றி வந்துள்ளனர் இதை கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து விட்டு நகராட்சி நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளனர் அங்கு வந்த வருவாய் அலுவலர் Ri சரவணன்  படகு சவாரி செய்த அனைவரையும்  அழைத்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் விருதுநகரில் இருந்து வந்ததாகவும் வந்தவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது இவர்கள் அனைவரும் நகராட்சி ஊழியர் ஒருவரின் உறவினர்கள் என்றும் இதன் காரணமாகவே படகுகளை  எடுத்துக்கொண்டு சென்றதாகவும்கூறுகின்றனர்   இது ஒரு கண்துடைப்புதான் இதுவே மற்றவர்கள் செய்தால் தண்டனை தேடிவரும் என்று  இப்பகுதி மக்கள் கூறுகின்றனர் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி இல்லை என்று கூறும் நகராட்சி நிர்வாகம் நகராட்சி ஊழியர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கிறது படகு ஓட்டிய நபர்களை கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிப்பதாக கூறி சென்று விட்டனர் அரசு உளியார்க்குக்கு தனி அதிகாரம் உளளது என்றும் சுற்றுலா பயணிகள் பேசுகிறார்கள்  இதுபற்றி நாம் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளரிடம் கேட்கும்பொழுது அவர் வேறு ஒரு கூட்டத்தில் இருப்பதாக கூறி அலைபேசியை துண்டித்து விட்டார்.

Comments