விருதுநகர் மாவட்டம் காவல் துறையில் பணிபுரியும் காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் காவல் நிலையத்தில் காதல் மனைவி தர்னா போராட்டம்
சாத்தூர் அக் 17,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் குடியிருந்து வருபவர் மாதவி (31). இவர் கடந்த 2010ஆண்டு முதல் அதே பகுதியில் இருக்கும் ஆறுமுகம் மகன் முனியசாமியை காதலித்து வந்துள்ளார்.
அப்போது முனியசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.2014 ம் ஆண்டு முனியசாமிக்கு தமிழ்நாடு காவல் துறையில் வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த பின்பும் மாதவியுடன் முனியசாமி தொடர்பில் இருந்துள்ளார்.
அதில் மாதவி கருப்பம் அடைந்துள்ளார் மாதவி கர்ப்பம் ஆனதை தெரிந்து கொண்ட காவலர் முனியசாமி குடும்பத்தார் காவலர் முனியசாமிக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். இதை தெரிந்து கொண்ட மாதவி 2014 ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் காவலர் முனியசாமி மாதவியை சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி பிள்ளையார் கோவிலில் திருமணம் முடித்து உள்ளார். காவலர் முனியசாமி மாதவியை திருமணம் செய்து விருதுநகரில் உள்ள காவலர் குடியிருப்பில் இரண்டு ஆண்டு காலாமாக வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.அதன் பின்பு காவலர் குடியிருப்புக்கு கணவர் முனியசாமி செல்வதை நிறுத்தியுள்ளார்.
மாதவி தனக்கு குடும்பம் நடத்த வழியில்லாததால் தன் குழந்தையுடன் மாதவி தன் தாய்வீட்டிற்கு வந்து தனது தாய் பரமேஸ்வரியுடன் தங்கியுள்ளார். தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டி பல இடங்களில் மனு கொடுத்துள்ளார்.
கணவர் காவலராக இருப்பதால் காவல் துறையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை தன்னை வேனு என்றே அலைகழிப்பதாக கூறி நடவடிக்கை எடுத்து தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மாதவி அவருடைய 6 வயது பெண் குழந்தை மாதவியின் அம்மா பரமேஸ்வரி ஆகியோர் தர்னா போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி முனியசாமி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் .அதன் பின்பு அங்கிருந்து சென்ளனர்.
Comments
Post a Comment