பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. B have இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது! மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

பெரம்பலூர், அக்- 13,
பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், முன்னிலையில்  நடைபெற்ற கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி,டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.ந.அ.பெருநற்கிள்ளி, 
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், 
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,   நூருல்ஹிதா இஸ்மாயில், 
ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, தி.மதியழகன், ஞானமூர்த்தி,  ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன்,  சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், 
நகரச் செயலாளர் எம். பிரபாகரன்,
மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் கல்பனா ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் பிரபாசெல்லப்பிள்ளை,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

1- பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும்,

2- பெரம்பலூர் நகர 19 - வது வார்டு தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும்,

3-கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா - வை நியமனம் செய்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்,

4- கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள்  ஆகிய பொறுப்புகளுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும்.,

5- விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு துணை போன அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், 

6- எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் தளபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், அதில் பணியாற்ற தகவல் தொழில்நுட்ப அணிக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், 

7- பொதுத் தேர்தல்களில் கதாநாயகனாக வலம் வரும் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்குழு அமைத்தமைக்கு நன்றி தெரிவித்தும்,  அதில் இடம் பெற்றிருக்கும் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா - வை இந்த கூட்டம் வாழ்த்தியும்,

8- வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் தளபதி அவர்களை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அயராது உழைப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குனனம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.